அஜித்தின் வாழ்க்கையை மாற்றிய சூர்யா.. இப்படி ஒரு விஷயத்தை மிஸ் பண்ணிட்டாரே..!

Author: Vignesh
10 February 2024, 1:02 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் படங்களில் நடிப்பதோடு சரி எந்த பொது நிகழ்ச்சிக்கோ, திரைப்படம் சார்ந்த விழாக்களிலோ பங்கேற்கவே மாட்டார். இதனை அவர் தனது கொள்கையாகவே பல வருடங்களாக செய்து வருகிறார். இதனை சிலர் பாராட்டினாலும் பெருவாரியான மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

ajith-updatenews360

இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வரும் அஜித் குமார் அதற்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ajith-updatenews360

இந்நிலையில், அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படங்களில் ஒன்று ஆசை பிரபல இயக்குனர் வசந்த் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், முதன் முதலில் இந்த படத்திற்கு ஹீரோவாக நடிக்க இருந்தது அஜித் இல்லையாம். சூர்யா தான் ஹீரோவாக நடிக்க இருந்தாராம், அதுவும் அவருடைய அறிமுக திரைப்படமாக இது அமைந்திருக்குமாம்.

aasai

ஆனால், அவர் அந்த படத்தில் நடிக்க விருப்பம் காட்ட வில்லையாம். அதன் பின் அஜித்தைவைத்து இயக்க முடிவு செய்து ஆசை படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். இதனை இயக்குனர் வசந்த் பேட்டி ஒன்றில் முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 365

    0

    0