துபாய் ரேஸில் பல திக் திக் சவால்களை எதிர்கொள்ள போகும் அஜித் குழுவினர்… 24 மணி நேரம் எப்படிங்க..!
Author: Selvan10 January 2025, 2:15 pm
விடாமுயற்சியோடு களமிறங்கும் அஜித் டீம்
நடிகர் அஜித்குமார் தற்போது சினிமாவிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தன்னுடைய கனவான கார் ரேஸில் இறங்கியுள்ளார்.இதற்காக சமீபத்தில் கார் பயற்சில் ஈடுபட்டு இருக்கும் போது எதிர்பாரா விதமாக அஜித் ஓட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது.
ஆனால் நல்வாய்ப்பாக அவருக்கு எந்த வித காயம் இன்றி தப்பினார்.இதற்கு அடுத்து இன்று நடைபெறும் துபாய் கார் பந்தயத்தில் தனது அணியுடன் களமிறங்குகிறார்.
கிட்டத்தட்ட 12ஆண்டுகளுக்கு பிறகு அவர் கார் ரேஸில் ஈடுபட இருப்பதால்,உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் இன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கிய கார் ரேஸ் நாளை மதியம் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது,இந்த ஒட்டுமொத்த 24மணி நேரத்தில் எந்த அணி அதிக தூரத்தை கடந்துள்ளதோ,அவர்களே அடுத்த சுற்றுக்கு செல்வார்கள்.
சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் இந்த கார்கள் ஓடுதளத்தில் சீறிப்பாயும்,இந்த கார் ரேஸில் ஏகப்பட்ட சவால்களை அஜித் குழுவினர் சந்திக்க உள்ளனர்.அதாவது ஒரு அணியில் குறைந்தபட்சம் 3 வீரர்கள் முதல் அதிகபட்சம் 5 வீரர்கள் வரை கலந்துகொள்ளலாம்.ஒருவர் சுமார் 6 மணி நேரம் ஓட்டுவார்கள்,இதற்கிடையில் அந்த அணியின் டீம்,காரின் தரத்தை பரிசோதித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இதையும் படியுங்க: குஷி படத்தில் ஜோதிகாவின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு கதையா…ரகசியத்தை உடைத்த எஸ் ஜே சூர்யா..!
அதுமட்டுமல்லாமல் காரின் ரெஸ்டிங் டைம் 20 நொடிகள் முதல் 45 நொடிகள் வரை தான்,அதற்குள் காரின் தரத்தை பரிசோதித்து,டயரை மாற்றி எரிபொருள் நிரப்ப வேண்டும்.ஒரு வீரரை மாற்ற வேண்டும் என்றால் கூட சில வினாடிகளே கால அவகாசம் கொடுக்கப்படும்,இவ்ளவு சவால்களோடு களமிறங்க உள்ள அஜித் குழுவினர் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை பண்ணி வருகின்றனர்.