திடீரென நடிகர் அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.. இப்படி ஒரு பிரச்சனையா?..

Author: Vignesh
7 March 2024, 12:31 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மலையாள திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று தவிர்க்க முடியாக நடிகராக இருந்து வருகிறார். காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல அட்டகாசமான படங்களில் நடித்துள்ளார்.

படத்திற்கு படம் தனது மாஸான நடிப்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்று அவரை ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் பைக் ரேஸ் , கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். திரைப்படங்களில் நடித்துக்கொண்டே வேர்ல்டு டூர் சென்று வரும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ajith -updatenews360

இந்நிலையில், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். இதனை அடுத்து, அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்ட நிலையில், அதெல்லாம் உண்மை இல்லை, வழக்கமான மருத்துவ சோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். மேலும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். ஏற்கனவே, அஜித்துக்கு பல அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!