அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2024, 11:00 am
அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட், பேட், அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் விடாமுயற்சி வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து குட்பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதைப் பார்த்த அஜித், மீண்டும் நாம் இணையலாம் என கூறியுள்ளார். அதே சமயம் மார்க் ஆண்டனி படம் கடந்த ஆண்டு வெற்றி படமாக அமைந்தது. இதனால் மார்க் ஆண்டனி 2 படத்தை எடுக்க விஷால் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அஜித்துடன் ஆதிக் இணைந்ததால், அந்த படத்தை முடித்துவிட்டு விஷால் கூட்டணி போடலாம் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் அஜித்தும், மார்க் ஆண்டனி படத்தை எடுத்துவிட்டு மீண்டும் நாம் இணையலாம் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது