2023 FIRST BLOCKBUSTER… வெளியானது அந்த படத்தின் BTS Video… இணையத்தில் சும்மா அதிருதுல்ல…

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட 2 திரைப்படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் H.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 3ஆவது திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜான் கோக்கென், பவானி ரெட்டி, ஜி பி முத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் செம மாஸாக உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தியதாக படத்தினை பார்த்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், துணிவு படத்தின் படக்குழு தற்போது படத்தின் உருவாக்க BTS வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், துப்பாக்கி சுடும் காட்சிகள், Mocobot கேமரா பயன்படுத்தி எடுத்த காட்சிகள், ரியலாக வெடிக்க வைக்கப்பட்ட வெடி குண்டுகள் அடங்கிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் இயக்குனர் வினோத், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஆகியோருடன் நடிகர் அஜித் கலந்துரையாடல் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும், I Feel I Feel I Feel Tonight… I Need A Money Money Money Tonight. No Guts No Glory No Guts No Glory என்ற பாடலும் பின்னணி இசையில் இடம் பெற்றுள்ளது.

Poorni

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

14 hours ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

14 hours ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

15 hours ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

15 hours ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

16 hours ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

16 hours ago

This website uses cookies.