போடு வெடிய .. KGF கோட்டைக்குள் கால் தடம் பதிக்கும் AK?.. கேட்கவே நல்லா இருக்குதே..!

Author: Vignesh
24 July 2024, 11:58 am

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர் அஜித். தற்போது, இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.

முன்னதாக, விடாமுயற்சி படத்தைப் போல வருட கணக்கில் நேரத்தை விரையம் ஆக்காமல் ஆதிக் ரவிச்சந்திரன் பக்காவாக பிளான் போட்டு ஒவ்வொரு செடுலாக முடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் அந்த படம் நிச்சயம். இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் முடிவடைந்து. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: எனக்கு பிடிக்கல நான் ரொம்ப பிசி.. பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த தமிழ் நடிகர்..!

இந்நிலையில், கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 படங்களில் மூலம் இந்தியாவில் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படங்கள் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய நிலையில், தெலுங்கில் பிரபாஸ் நடித்த சலார் ஒன் படத்தை இயக்கி வெற்றியை கண்டார்.

அடுத்து சலார் 2 படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அடுத்து அஜித்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கே ஜி எஃப் யூனிவர்சில் அஜித்குமார் ஒரு முக்கிய அங்கமாக இருக்கப் போவதாகவும், கே ஜி எஃப்3 படத்தில் யாஷ் மற்றும் அஜித்குமார் இணைந்து நடிக்கப் போவதாகவோ தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.

பிரசாந்த் நீலை ஏற்கனவே டோலிவுட் நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் புக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதைப்போல, தேவாரா படத்தை முடித்த கையோடு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கேஜிஎப் 3 படம் வெளியாக பல ஆண்டுகள் ஆகும் என கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அஜித்தை பிரஷாந்த் நீல் எப்படி இயக்கப் போகிறார் என்று தெரியவில்லை, மல்டி ஸ்டார் படமாக பிரஷாந்த் நீல் உருவாக்கினால் மட்டுமே இதற்கான சாத்தியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 262

    0

    0