நம்ம ஜெயிச்சுட்டோம் நண்பா…ஆனந்த கண்ணீரில் அஜித்…துபாய் 24H கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் அணி..!

Author: Selvan
12 January 2025, 4:23 pm

கனவை நினைவாக்கிய அஜித்..!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் நீண்ட வருடத்திற்கு பிறகு துபாயில் நடைபெற்ற 24மணி நேர கார் ரேஸில் தனது அணியுடன் கலந்து கொண்டார்.

இதற்காக அஜித் பல நாட்கள் தீவிரமாக உழைத்து,உடலை குறைத்து ரேஸில் ஈடுபட்டார்.அஜித் அணியில் அஜித்துடன் fabian,detry,camy ஆகியோர் பங்குபெற்றனர்.

Ajith racing team achievement

சமூக வலைத்தளம் முழுவதும் அஜித் கார் ரேஸ் பற்றிய தகவல்கள் உலா வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.வழக்கத்துக்கு மாறாக அஜித் கார் ரேஸ் பந்தயத்தின் போது மீடியாவில் பேட்டி கொடுத்து ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.

இதையும் படியுங்க: இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!

இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கிய கார் ரேஸ் பந்தயத்தை பார்க்க ஏராளமமான ரசிகர்கள் திரண்டனர்.அதிலும் ஆஜித்-க்கு அவர்கள் அளித்த ஆதரவும்,கரகோசமும் சொல்ல வார்த்தையே இல்லை. பெரும் கனவோடு கலந்து கொண்ட அஜித்தின் இந்த கார் ரேஸ் தற்போது முடிந்து வெற்றிபட்டியலை அறிவித்துள்ளது.இதில் அஜித் அணி 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அஜித் மிகவும் உற்சாகம் ஆகி,இந்திய அணியின் தேசிய கொடியை கையில் ஏந்தி,தனது அணியுடன் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை பார்த்த ரசிகர்களும் அஜித்துக்கு வாழ்த்துக்களை கூறி பட்டி தொட்டி எங்கும் அஜித்தின் கார் ரேஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி பொங்கல் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  • Ajith Kumar Dubai car race victory அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!
  • Leave a Reply