அஜித்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக பிரபல நடிகர் வீடியோ வெளியீடு..!

Author: Selvan
1 December 2024, 2:40 pm

நடிகர் அஜித் 15 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய கனவான கார் ரேஸில் களமிறங்கியுள்ளார்.அதற்காக அவர் தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகிறார். அதனுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் வைரல் ஆகி வருகிறது.

R. Madhavan praises Ajith Kumar

அவருடைய கார் ரேஸ்க்காக உலகம் முழுவதும் இருக்ககூடிய அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.சினிமாவில் இவர் நடித்துள்ள விடாமுயற்சி,குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இதையும் படியுங்க: ரசிகர்களை பரவசப்படுத்திய அனிருத் ..சிங்கப்பூரில் நடந்த மாயாஜாலம்..!

இந்த சூழலில் பிரபல நடிகர் மாதவன் அஜித்தை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அஜித்தின் கார் ரேஸ் விடீயோவை போட்டு “அஜித்குமார் ரேஸிங் அணி ட்ராக்கில் சீறிப்பாய்வதை பார்க்க மிகுந்த ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.அஜித் ஒரு சாதாரணமனிதர் இல்லை… என்ன நடந்தாலும் அவருடைய கனவுகளை நோக்கி முழு ஈடுபாடுடன் பயணித்து கொண்டிருக்கிறார்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டு அஜித்தை புகழ்ந்துள்ளார் மாதவன்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!