பலரை வாழ வைக்கும் நடிகர் ‘அஜித்’…இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல்..!

Author: Selvan
8 February 2025, 3:14 pm

ஏழை மக்களின் கடவுளாய் நடிகர் அஜித் குமார்

தன்னுடைய அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார்.இவர் நடிப்பை தாண்டி பைக்,கார் ரேஸ்,துப்பாக்கி சுடுதல்,புகைப்படம் எடுத்தல்,குக்கிங் என பல வித திறைமைகளை கையில் வைத்திருப்பவர்.

இதையும் படியுங்க: ‘நாட்டாமை’ படத்தில் மிச்சர் சாப்பிட்ட நபர் யார்..? கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரசிய தகவல்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பெரும் புகழை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும்,எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனக்கென்று ஒரு தனி பாதையை உருவாக்கி அதில் வெற்றி நடை போட்டு வருகிறார்,மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கு அடிக்கடி அறிவுரைகளை கூறியும் வருகிறார்.

சமீபத்தில் கூட துபாய் கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்களுடைய வேலையை முதலில் நேசியுங்கள் என கூறியிருந்தார்.தற்போது சினிமா,கார் ரேஸ் என கலக்கி வரும் நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருதை அறிவித்து கௌரவித்தது.

அஜித் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்து வருவார்,இவருடைய உதவியை பெரும்பாலும் வெளியே சொல்ல மாட்டார்,இந்த நிலையில் தற்போது அஜித் செய்து வரும் மிகப்பெரிய ஒரு நற்செயல் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில்,அஜித் வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி வரை ஆசிரமத்திற்கு கொடுத்து பலருடைய வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறார்,இதனால் சுமார் 20000 நபர்கள் அஜித் அளிக்கும் நன்கொடையால் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.இப்போ இருக்கிற காலகட்டத்தில் பலர் தாங்கள் செய்கின்ற உதவியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பெயரை சம்பாதித்து வரும் சூழலில்,அஜித் சைலண்டாக பலருடைய வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே தன்னுடைய வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாதிரி பல நல்ல நல்ல விசயங்கள் அஜித் வாழ்க்கையில் இருந்து வருவதால்,ரசிகர்கள் அவரை கடவுளுக்கு நிகராக வைத்து கொண்டாடி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?