மீண்டும் பிரச்சனை….விடாமுயற்சி படத்தில் இருந்து விலகும் அஜித்? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

Author: Shree
23 May 2023, 6:24 pm

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளான நேற்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தின் ராசியான முதல் எழுத்தான “v”ல் தான் இந்த முறையும் “விடாமுயற்சி” என டைட்டில் உள்ளது. இதனால் நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறலாம். மேலும் இதன் டைட்டிலில் சில சீக்ரெட்ஸ் ஒளிந்திருக்கிறதை பார்க்க முடிகிறது.

அதாவது, விடாமுயற்சி என்ற டைட்டிலில் “ற்” என்ற வார்த்தையில் வைக்கப்பட்ட புள்ளி தேடல் பொருளை உணர்த்துவதாக இருக்கின்றது. எனவே இப்படத்தில் அஜித்தின் வேர்ல்ட் டூர் பயணத்தின் ஸ்வாரஸ்யங்களையும், சாகசங்களையும் டாகுமெண்ட்ரியாக எடுக்கலாம் என எதிர்பார்க்க முடிகிறது. அது மட்டும் இல்லாமல் போஸ்டரில் சுழல் இடம் பெற்று இருப்பதால் ஒரு கப்பல் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் இருந்து அஜித் குமார் விலக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசி வருகிறார்களாம். இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவின் போது நடிகர் பார்த்திபன், ” 1000 கோடிக்கு ரெய்டு செய்ய வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் திரையரங்குகளுக்கு போங்க கண்டிப்பாக கிடைக்கும் என பலகோடி வசூலை வாரி குவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவரின் பேச்சால் அமலாக்கத் துறையினர் லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் தீவிர சோதனை செய்தது.

தொடர்ந்து லைகா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தாமதமாகி ஜூன் மாதம் இரண்டாம் வாரம் தான் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கவே விக்னேஷ் சிவனால் படம் தாமதம் ஆனது. தற்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்து விடாமுயற்சி தொடர் சிக்கலில் சிக்கி வருவதால் இப்படத்தை கைவிடும் முடிவில் இருக்கிறாராம் அஜித். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட அஜித் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 633

    0

    2