ஷூட்டிங் ஸ்பாட்டில் கண் கலங்கிய ஆதிக்…’குட் பேட் அக்லி’ தரமான சம்பவமா இருக்குமா.!

Author: Selvan
22 February 2025, 2:08 pm

ஆதிக் ரவிச்சந்திரனின் கனவு

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால்,தற்போது அனைவரும் அஜித்தின் மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ படத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதையும் படியுங்க: வீல் சேரில் ஆட்டம் போடும் ராஷ்மிகா…வைரலாகும் கியூட் வீடியோ.!

இப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என்பதால் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து ரசித்து எடுத்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்தை பற்றி பல சுவாரசிய தகவ்களை பகிர்ந்து வருகிறார்,அதிலும் குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆதிக் ரவிச்சந்திரன் கண் கலங்கிய நிகழ்வை குறிப்பிட்டு பேசியுள்ளார்.அதாவது குட் பேட் அக்லி தரமான ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும்,ஆதிக் மாதிரி ஒரு அஜித் ரசிகரை நான் பாத்ததே இல்லை,அவர் காலேஜ் படிக்கும் போது அஜித்தின் படம் ரிலீஸ் ஆகும் போது,படத்தில் அஜித் எந்த கெட்டப்பில் இருக்கிறாரோ,அதே கெட்டப்பில் சென்று படத்தை பார்த்து ரசிப்பார்.

இந்த படத்தின் முதல் ஷாட் எடுத்து முடித்ததும் ஆதிக் தன்னை அறியாமல் கண் கலங்கி விட்டார் என ஜி வி பிரகாஷ்குமார் தெரிவித்திருப்பார்.

இப்படத்தில் மூன்று கெட்டப்களில் அஜித் நடித்திருப்பதால் பழைய வின்டேஜ் அஜித்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்,ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில்,படத்தின் அடுத்தடுத்து அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

  • Ajith Kumar car race accident அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!
  • Leave a Reply