“கங்குவா” படத்தால் நடந்த விபரீதம்…அஜித் படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரபலம் ..!
Author: Selvan24 November 2024, 8:10 pm
அஜித்தின் குட் பேட் அட்லி அப்டேட்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார்.இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தில் இருந்து பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டு இருக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும்,வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
எனவே இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கி பெரும் தோல்வியை அடைந்த ஆதிக் அடுத்து விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்.
இதையும் படியுங்க: கவர்ச்சியில் மின்னும் கீர்த்தி சுரேஷ்…கல்யாணத்திற்கு முன்னாடி இதெல்லாம் ரொம்ப தப்புமா..!
அஜித் எப்போதும் ஒரு படத்தை முடித்த பிறகு சில மாதங்கள் கழித்து தான் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார்.ஆனால் இந்த தடவ அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அட்லி படத்தில் மும்மரமாக நடித்து வருவது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.
தேவி ஸ்ரீ பிரசாத் விலகல்
குட் பேட் அட்லி திரைப்படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் இசையமைப்பாளரை மாற்றும் வேளையில் இறங்கியுள்ளனர்.
முன்னதாக தேவி ஸ்ரீ பிரசாத்தை தேர்வு செய்து வைத்தனர்.இவர் இசையில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்மறை கேள்விகளை எழுப்பியது.
இதனால் படக்குழு இசையமைப்பாளரை மாற்றும் முடிவை எடுத்திருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.அவருக்கு பதிலாக புதிதாக யார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை.