‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!
Author: Selvan28 February 2025, 7:09 pm
குட் பேட் அக்லி என்ன கதை
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி,ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.படத்தின் டீசர் இன்று இரவு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தியேட்டர்களிலும் ஒளிபரப்படுகிறது.
இதையும் படியுங்க: உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!
மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்,இப்படத்தில் அஜித் மூன்று கெட்டப்களில் நடித்துள்ளதால் இதில் வின்டேஜ் அஜித்தை பார்க்கலாம் என கூறப்படுகிறது.ஆதிக் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் பல சுவாரசியமான காட்சிகள் இருக்கும்,மேலும் படத்திற்கு இசையமைத்துள்ள ஜி வி பிரகாஷ் என்னுடைய கரியரின் பெஸ்ட் படமாக இருக்கும் என ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் படம் யுனிவர்ஸ் படமாக இருக்குமா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தகவலை பரப்பி வருகின்றனர்.மேலும் படம் குறித்த அப்டேட்டை ஜி வி சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கும் போது பல இடங்களில் யுனிவர்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்.
மேலும் வேர்ல்ட் என்ற வார்த்தையும் பயன்படுத்துகிறார்,அதாவது GBU-வில் இருக்கும் U என்றால் யுனிவர்ஸ் ஆக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்,கடைசியாக ஜி வி போட்ட பதிவில் கூட ‘ஆரவாரமே இன்னைக்கு ஆரம்பிக்குறோம் மாமே,இன்றைக்கு நாம் உலகத்திற்குள் செல்லவுள்ளோம்,இந்த உலகத்திற்கு நன்றி’ என குறிப்பிட்டிருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலர் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ஆவலுடன் இருக்கின்றனர்.