மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் . விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்படுகிறார். மேஜையில் துப்பாக்கிகள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அலளிக்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
படத்தை புஷா திரைப்படத்தை தயாரித்த மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: பல முறை சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டேன்… ஆனால், மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி..!
சமீபத்தில், குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பட குழு வெளியிட்டு இருந்தனர். இந்த போஸ்டர் 24 மணி நேரத்தில் 41 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு மாபெரும் சாதனையும் படைத்தது. இந்த படத்தில், நடிக்க நடிகர் அஜித்துக்கு 165 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், சமீபத்தில் சண்டைக் காட்சிகளுடன் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் படத்தின் OTT உரிமை குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை பிரபல OTT நிறுவனமான Netflix 95 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இதன் மூலம் படத்தின் பட்ஜெட்டில் கால்பங்கு படப்பிடிப்பின் போதே குட் பேட் அக்லீ திரைப்படம் வசூல் செய்துவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
இந்நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பிற்கு பக்கத்தில் தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் விளம்பர படப்பிடிப்பு நடந்து வந்தது. சிரஞ்சீவியை நேரில் சென்று சந்தித்துள்ளார் அஜித். இந்த சந்திப்பில், எடுக்கப்பட்ட புகைப்படத்தை சிரஞ்சீவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், இந்த பதிவில் அஜித் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில், அஜித்துடைய முதல் படத்தின் இசை வெளியீட்டு விழா என் தலைமையில் நடந்தது. அவருடைய மனைவி ஷாலினி என்னுடைய படத்தில் நடித்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் அஜித்தின் வளர்ச்சியை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளிட்ட விஷயங்களை அந்த பதிவில் சிரஞ்சீவி பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.