கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. ரசிகர்களை அதிரவைத்த Video..!

Author: Vignesh
4 April 2024, 2:17 pm

பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகி, இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர். பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உடம்புல அவ்வளவு பிரச்சினை.. லாஸ்லியா இதனால் தான் இப்படி ஆனாராம்..!

ajith-updatenews360

இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. வானிலை மோசம் அடைந்ததால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பிட அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

Ajith

இதனால், படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும், தாமதம் ஆனது. மேலும், விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியிடாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பின் ஷூட்டிங் போது, அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் ஓட்டி வந்த கார் பட்டுப்பாட்டை இழந்து கடுமையான விபத்தில் சிக்கிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்