அந்த நடிகர் தவறவிட்ட மிகப்பெரிய வாய்ப்பு.. விடாமல் பிடித்துக்கொண்ட அர்ஜுன்..!
Author: Vignesh28 March 2024, 1:35 pm
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார். துணிவு படுத்தினை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்புகள் சற்று தாமதமாகவே வெளியானது. அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என தகவல்கள் முன்பே வெளியானதுதான்.

இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், ஏ கே 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருக்கின்றனர். மேலும், பொங்கல் 2025-ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அஜித்தின் நடிப்பில் இதுவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதேபோல், சில ஹிட் திரைப்படங்களிலும் அவர் தனது திரை வாழ்க்கையில் தவற விட்டுள்ளார். அப்படி அவர் தவறவிட்ட படம் தான் மருதமலை. சுராஜ் இயக்கத்தில், அர்ஜுன் வடிவேலு போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் மருதமலை.

இப்படத்தின் முதன் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம். அந்த சமயத்தில், கிரீடம் படத்தில் நடித்து வந்துள்ளார். அதனால், கிரீடம் படத்தில் போலீஸ் ரோல் மருதமலை படத்தில் போலீஸ் ரோல் என்பதால், மருதமலை படத்தை நிராகரித்து விட்டாராம். இந்த தகவலை மருதமலை படத்தை இயக்கிய இயக்குனர் சுராஜ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.