அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?
Author: Prasad25 April 2025, 5:42 pm
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்?
அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகுதான் அவர் திரைப்படங்களில் நடிப்பது குறித்தான முடிவுகளை எடுப்பார் என கூறப்படுகிறது.

இயக்குனர்களின் பட்டியல்!
அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாக அது பரபரப்பாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சினிமா சார்ந்த ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை “புஷ்பா” இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளதாக ஒரு செய்தியை பகிர்ந்தாராம். அந்த குழுவில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவும் இருந்தாராம்.
அப்பத்திரிக்கையாளர் அந்த தகவலை பகிர்ந்ததும் சுரேஷ் சந்திரா, “இல்லை, இப்படி ஒரு செய்தி அடிப்படையற்றது. இதில் உண்மை இல்லை” என அந்த செய்தியை மறுத்துள்ளாராம். “சுரேஷ் சந்திரா பதறுவதை பார்த்தால் ஒரு வேளை இந்த செய்தி உண்மையாக இருக்குமோ?” என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.