போர்ச்சுகளில் அஜித் காருக்கு ஆபத்தா… வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!
Author: Selvan9 February 2025, 3:15 pm
வைரலாகும் அஜித் பேசிய வீடியோ
நடிகர் அஜித்குமார் தற்போது போர்ச்சுகளில் நடைபெறும் கார் பந்தயத்திற்காக தயாராகி வருகிறார்.அப்போது பயிற்சியில் ஈடுபட்டிற்கும் போது எதிர்பாரா விதமாக அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: என்னுடடைய கரியரில் சிறந்த பயணம் ‘விடாமுயற்சி’..நடிகை திரிஷா மகிழ்ச்சி..வைரலாகும் வீடியோ.!
அஜித் கடந்த மாதம் துபாயில் நடந்த 24H-கார் ரேஸில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கையோடு போர்ச்சுகள் சென்று,தனது அடுத்த பந்தயத்திற்கு தயாராகி வருகிறார்.இதனால் தற்போதைக்கு சினிமாவில் இருந்து விலகி,முழு ஈடுபாட்டுடன் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் போர்ச்சுகள் பயிற்ச்சியின் போது அவர் ஓட்டி சென்ற கார் விபத்து ஆகியுள்ளது.இந்த தகவலை அவரே கூறியுள்ளார்,அதில் எனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி,நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி,இன்றைய பயிற்சியின் போது கூட என்னுடைய கார் விபத்துக்குள்ளானது,உடனே மெக்கானிக் குழுவினர் விரைந்து வந்து அதை சரி செய்து விட்டனர் என அந்த வீடியோவில் பேசியிருப்பார்.
Recent Video of #AjithKumar from Portugal🔥#AjithKumarRacing
— Touring Talkies (@ToouringTalkies) February 9, 2025
pic.twitter.com/Mtg1Yp8jFX
தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது,மேலும் ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.