விக்கியை போல் அவரையும் தூக்கி எறிந்த அஜித்.. விடாமுயற்சியில் அடுத்த விக்கெட் காலி?
Author: Vignesh13 December 2023, 5:26 pm
நடிகர் அஜித்குமார் துணிவு படத்திவினை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், திடீரென கதையை மாற்ற சொல்லி அஜித் காலக்கெடு கொடுத்தும் அதை மாற்றாமல் இருந்ததால் விக்னேஷ் சிவனை படத்திலிருந்து அஜித் தூக்கினார்.
அவரைத் தொடர்ந்து, இயக்குனர் மகிழ்திருமினியை கமிட் செய்த அஜித் விடாமுயற்சி என்ற டைட்டிலோடு அஜர்பைஜனுக்கு சென்று ஷூட்டிங்கை ஆரம்பித்தனர். இடையில், அஜித் ஒரு விஷயமாக சென்னை திரும்பியிருந்தார். ஏற்கனவே, கதை விஷயத்தில் மாற்றம் குறித்து படப்பிடிப்பு தாமதமாகி வருவது குறித்தும். ரசிகர்கள் மத்தியில் விடாமுயற்சி சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், திடீரென விடாமுயற்சி படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வெளியேறியுள்ளார். அஜித் சென்னை வர இதுதான் காரணம் என்றும், ஒளிப்பதிவாளரை அதிரடியாக அஜித் மாற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தான் தற்போது ஒளிப்பதிவு செய்து வருவதால் மீண்டும் படப்பிடிப்புக்கு அஜித் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.