அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!
Author: Selvan22 February 2025, 10:50 pm
விடாமுயற்சியோடு போராடும் அஜித்
நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த வகையில் கடந்த மாதம் துபாயில் நடந்த கார் ரேஸில் தனது அணியுடன் கலந்துகொண்டு 3 வது இடத்தை பிடித்து அசத்தினார்.
இதையும் படியுங்க: துறவி பாதையை கையில் எடுத்த தமன்னா… மகா கும்பமேளாவில் நடந்த ட்விஸ்ட்.!
அப்போது அவர் பயற்சியில் ஈடுபட்ட போது அவர் ஓட்டி சென்ற கார் அதிவேகமாக தடுப்பு சுவரின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது,ஆனால் அதிஷ்டவசமாக அஜித்திற்கு எந்த வித காயமின்றி உயிர் தப்பினார்,துபாய் கார் ரேஸுக்கு பிறகு பேட்டியளித்த அவர் இனி அடுத்ததுது கார் பந்தயத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்,அதற்காக தன்னுடைய உடலை பிட் செய்து,தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில்,ஸ்பெயினில் நடைபெற்ற ஐரோப்பா போர்ஷே ஸ்பிரிண்ட் பந்தயத்தில் ஈடுபட்ட போது முன்னே சென்ற கார்மீது அஜித் ஓட்டி சென்ற கார் மோதி பல்டி அடித்தது.இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வந்துள்ளது.
Ayyo.. 🙄 pic.twitter.com/K8WcA5b0pU
— Trollywood 𝕏 (@TrollywoodX) February 22, 2025
சில நேரத்திற்கு முன்பு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில்,தற்போது அஜித் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது.