இதுவா ‘துணிவு’ கிளைமேக்ஸ்..? இப்படி மட்டும் இருந்தா..? ரசிகர்கள் ஏற்பார்களா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!

நடிகர் அஜித் வலிமை படத்தில் துப்பாக்கி எடுத்து சுடுவது கூட பாவம் என பஞ்ச் வசனம் பேசி கடைசியில் கிளைமேக்ஸில் வில்லன்களுக்கு எல்லாம் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வைப்பார். இந்நிலையில், இயக்குநர் ஹெச். வினோத் அஜித்தை மீண்டும் கெட்ட வார்த்தை, கன் எடுத்து டுமீல் டுமீல்னு சுட வைத்துள்ளார் என துணிவு ட்ரெய்லரை பார்த்து ஒரு பக்கம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மறுபக்கம் மக்கள் பணத்தை திருடுறீங்களே வெட்கமா இல்லை என்கிற வசனத்துக்கு வெட்கமா இல்லை என்கிற வசனத்தையும் என்ன மாறி ஒரு அயோக்கிய பயன்னு அஜித் பேசும் வசனங்களையும் வைத்து ஏகப்பட்ட மீம்களை நெட்டிசன்கள் பறக்க விடுகின்றனர்.

இதில், எல்லை மீறி துணிவு படத்தின் கிளைமேக்ஸ் மட்டும் இப்படி இருந்தால் செத்துடுவேன் ஜமுனா என இயக்குநர் ஹெச். வினோத்தை பங்கமாக கலாய்க்கும் மீம் ஒன்றும் இனையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

பீஸ்ட் படத்தில் மாலை விஜய்யே ஹைஜாக் செய்திருந்தால் எப்படி இருக்கும் அதுதான் துணிவு படத்தின் கதையே என ட்ரோல் செய்து வருகின்றன. துணிவு படத்தின் ட்ரெய்லரில் யுவர் பேங்க் எனும் வங்கியை ஹைஜாக் செய்யும் அஜித் மற்றும் அவரது டீம் அந்த வங்கியை கொள்ளையடிக்கும் காட்சிகள் தான் ட்ரெய்லர் முழுவதும் இடம்பெற்றுள்ளது.

போலீஸார் அதனை தடுக்க எப்படி முயற்சி செய்கின்றனர் என்பதும், நடிகர் அஜித் என்ன காரணத்துக்காக அந்த வங்கி கொள்ளையில் ஈடுபடுகிறார் என்பதும் தான் துணிவு படத்தின் கதையாக இருக்கும் என ஏகப்பட்ட கெஸ்ஸிங் துணிவு படத்தின் கதை குறித்து வலம் வருகின்றன.

அஜித்தின் பெயரில் ட்விஸ்ட் இருக்கு கதாபாத்திரங்களின் பெயர்களை அறிவித்த படக்குழு ட்ரெய்லரில் ஆவது அஜித்தின் கதாபாத்திர பெயரை அறிவிப்பார்கள் என்று பார்த்தால் அதிலும் அதை ரிவீல் செய்யவில்லை. இந்நிலையில், படத்தில் கூட கிளைமேக்ஸ் வரை அஜித்தின் பெயர் ரிவீல் செய்யப்படாது என்றும் கிளைமேக்ஸில் தான் செம ட்விஸ்ட்டாக அஜித்தின் பெயர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அஜித் மங்காத்தா பாணியில் விநாயக் மகாதேவ் முதல் காட்சியிலேயே குழந்தையை தலை கீழாக தொங்கவிடுவது மற்றும் படம் முழுக்க ஆபாச வசனங்களை பேசுவது என துணிவு படத்திலும் பின் பற்றியுள்ள விவரங்கள் சென்சார் ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கிளைமேக்ஸில் விநாயக் மகாதேவ் என அஜித்தின் பெயர் அறிவிக்கப்படுமா? என்கிற கேள்வியும் வலம் வருகிறது. இதனிடையே, செத்துடுவேன் ஜமுனா துணிவு படத்தில் அஜித் வில்லனாக நடித்து உள்ள நிலையில், வங்கி கொள்ளையில் ஈடுபடுவதற்கு காரணமே ஃபிளாஷ்பேக்கில் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய காசு இல்லாமல் அவர் இறந்து போய்விட்டார்.

இந்த காரணத்திற்காக தான், அனாதை ஆசிரமத்துக்கு டொனேட் பண்ணதான் பேங்க் ராபரின்னு மட்டும் கிளைமேக்ஸ் இருந்தா செத்துருவேன் ஜமுனா என இயக்குநர் ஹெச். வினோத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

துணிவு படத்தின் கிளைமேக்ஸ் ஏதாவது ஒரு அழுத்தமான ஃபிளாஷ்பேக் வைத்தால் தான் துணிவு படம் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும். அப்படியொரு கதை இல்லாமல் வெறுமனே துணிவு படத்தை எடுக்க நினைத்திருக்க மாட்டார்கள் வரும் ஜனவரி 12ம் தேதி எல்லாம் தெரியத்தானே போகுது காத்திருப்போம் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஹெச். வினோத் எப்படி சம்பவம் பண்ண போறாருன்னு எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Poorni

Recent Posts

அடிமேல் அடியெடுத்து வைக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…

9 minutes ago

சீமானின் டூர்.. அதிர்ச்சி கொடுத்த ராணிப்பேட்டை நிர்வாகி.. அடுத்தடுத்து ஆட்டம் காணும் நாதக!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…

37 minutes ago

திடீரென டிராக்கை மாற்றும் அஜித்.. டென்ஷனான GBU டீம்!

ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…

1 hour ago

போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!

தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…

13 hours ago

‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!

மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…

13 hours ago

பாகிஸ்.கேப்டன் செய்த பிரார்த்தனை…கிண்டல் அடித்த ரெய்னா..வைரலாகும் வீடியோ.!

பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…

14 hours ago

This website uses cookies.