துணிவு படத்துக்கு இவ்வளவு % திரையரங்குகளை பிடித்துவிட்டதா…? வேலையை ஆரம்பித்த ரெட் ஜெயண்ட்..! அப்போ வாரிசு?

Author: kavin kumar
15 November 2022, 12:40 pm

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

அந்த வகையில், வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித், எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்கள் கழித்து, டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இத்திரைப்படம் 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம். மஞ்சு வாரியார், மற்றும் சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் சில்லா சில்லா என்ற பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது. துணிவு படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கியுள்ளார்களாம்.

மேலும், சென்னையை அடுத்து வசூலில் முக்கியமாக பார்க்கப்படும், TT ஏரியாவான திருச்சி மற்றும் தஞ்சாவூரில் 70% திரையரங்குகளை துணிவு ஆக்கிரமித்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போ, பொங்கல் ரிலீஸில் போட்டி போடும் தளபதி விஜய் படமான வாரிசு பற்றிய விவரம் என்ன என ரசிகர்கள் ஆராய தொடங்கியுள்ளனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!