அதல பாதாளத்திற்கு சென்ற லைக்கா…காலை வாரிய விடாமுயற்சி.!

Author: Selvan
5 March 2025, 1:04 pm

லைக்காவிற்கு சோதனை மேல் சோதனை

கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆன விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது அப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம்.

இதையும் படியுங்க: பின்னணி பாடகி கல்பனாவுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை.. மருத்துவர்கள் ஷாக் தகவல்!

தமிழ் சினிமாவில் பெரிய பெரிய ஸ்டார் நடிகர்களை வைத்து பெரும் பொருட்செலவில் படங்களை தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்திற்கு சமீப காலமாக அடிமேல் அடி விழுந்து வருகிறது,ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2,ரஜினி நடித்த வேட்டையன் என அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து பரிதாப நிலையில் உள்ளது.

Lyca Productions financial loss

இதனால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை பெரிதும் நம்பி இருந்தது,கிட்டட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு அஜித் படம் ரிலீஸ் ஆக இருப்பதால் தியேட்டரில் மக்கள் கூட்டம் திரண்டு வசூலை அள்ளி நஷ்டத்தை ஈடு கட்டலாம் என யோசித்த லைக்காவிற்கு விடாமுயற்சி ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தது.

அஜித்,திரிஷா,அர்ஜுன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து கிட்டத்தட்ட 280 கோடிக்கு மேல் செலவழித்து நீண்ட நாட்கள் ஷூட்டிங்கும் நடைபெற்றது,இப்படத்தில் அஜித்திற்கு மட்டும் சம்பளம் 105 கோடி கொடுக்கப்பட்டுள்ளது,ஆனால் திரைக்கு வந்து சில நாட்கள் மட்டுமே வசூலில் ஜொலித்த நிலையில் படத்தின் மொத்த வசூல் 150 கோடியை கூட தாண்டவில்லை.

இதனால் தியேட்டரில் இருந்து OTT-க்கு தாவியது,அப்போதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாமல் காத்து வாங்கி வருகிறது,இதனால் லைக்கா நிறுவனம் அதல பாதாளத்திற்கு சென்று மீள முடியாமல் திணறி வருகிறது.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Leave a Reply