அஜித்தா இது..? இப்படி மெலிஞ்சுட்டாரே..-லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Author: Vignesh7 June 2023, 3:30 pm
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு எந்த வித பந்தாவும் இல்லாமல் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் டாப் நடிகரான அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில் AK 62 டைட்டில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தின் ராசியான முதல் எழுத்தான “v”ல் தான் இந்த முறையும் “விடாமுயற்சி” என டைட்டில் உள்ளது. இதனால் நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறலாம்.
இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். திரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருவதால் அவர் தான் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். எனவே அவரையே விடாமுயற்சிக்கும் ஹீரோயினாக போட்டால் படம் வேற லெவல் ஹிட் ஆகும் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். மேலும் படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் இந்த வாரம் புனேயில் துவங்க உள்ளது. அதில் வில்லனும் அஜித்தும் மோதும் காட்சி படமாக்க அங்கு பிரம்மாண்டமாக செட் போடப்பட்டுள்ளதாம். இப்படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக ரொமான்ஸ் காட்சிகளும் அதிகம் இடம் பெருமாம். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடாமுயற்சி படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தகவல் துவண்டு போயிருந்த அஜித் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், உடல் எடை கூடியிருந்த நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாக தகவல் வெளிவந்தது.
இந்நிலையில், அஜித் தனது ரசிகருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் சற்று உடல் எடையை குறைத்தது போல் அஜித் தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் ஸ்லிம்மாக மாறி வரும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.