‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவு.. வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
22 July 2024, 10:00 am

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62வது ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது. அதில், வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. சிறிது இடைவெளிக்கு பின்னர் நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படபிடிப்பு தொடங்கியது. படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ்சந்திரா அவப்பொழுது, அப்டேட் கொடுத்து வந்தார்.

சமீபத்தில், படத்தின் பர்ஸ்ட் லுக் பட குழுவினர் வெளியிட்டனர். அதை தொடர்ந்து, இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர். சமீபத்தில், த்ரிஷா மற்றும் அஜித் இணைந்து இருவரும் ஒரு விண்டேஜ் லுக் போஸ்ட்ரை பட குழு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இது குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதில், பட குழு ஒன்றாக இருந்த குரூப் போட்டோவை பதிவிட்டுள்ளனர். அவ்வபோது, படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகும். ஆனால், அதில் எதிலும் இயக்குனர் மகிழ்திருமேனி அஜித் உடன் காணப்படவில்லை. தற்போது, வெளியிட்ட புகைப்படத்தில் அஜித்தின் பக்கத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி காணப்படுகிறார். அடுத்த படப்பிடிப்பு பணி ஹைதராபாத்தில் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ