இது என்னடா AKக்கு வந்த சோதனை.. இது அஜித்தா? இல்ல போனி கபூரா? வயதான தோற்றத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
4 September 2023, 11:35 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மற்ற நடிகர்களை போன்று படங்களில் நடித்துவிட்டு அதை வித விதமாய் ப்ரோமோஷன் செய்வதெல்லாம் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. பொய்யாக வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவே மாட்டார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ, நேர்காணலுக்கோ, பொது விழாக்களிலோ அஜித்தை பார்க்கவே முடியாது. ஒரு படம் முடித்துவிட்டால் ட்ரிப் சென்றுவிடுவார். இல்லையெனில் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் , கார் ரேஸ் ட்ரோன் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செல்வது தான் அஜித்தின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக பார்க்கிறோம்.

படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு எந்த ஒரு பப்ளிசிட்டியையும் விரும்பாத சாதாரண மனிதராகவே நடந்துக்கொள்வார். இதனிடையே, கடந்த சில வருடங்களாக சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்து வருகிறாராம் அஜித். விடாமுயற்சி குறித்து எந்த ஒரு அப்டேட்டும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் இது அஜித்தா இல்லை போனிகபூரா என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

ajith updatenews360
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!