AK-வை கடுமையாக விமர்சித்த விஜய் ரசிகர்.. அஜித் ரசிகர்களுக்கு வந்துச்சே கோபம்..! ரணகளமாகும் ட்விட்டர் -திடீரென என்னாச்சு?
Author: Vignesh14 October 2022, 4:30 pm
தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைத்து வருகின்றனர். இவர் கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். இதனிடையே, அஜித் பைக்கில் ஹிமாலயாவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
இதனிடையே, அஜித்தின் எதாவது ஒரு புகைப்படம் கிடைத்தால் போதும் அதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருவது இயல்பான ஒன்றுதான். இந்நிலையில் அஜித்குமார் தாய்லாந்தில் மீண்டும் தனது பைக் ட்ரிப்பை தொடங்கி அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
அதில் அஜித் ஒரு புத்தர் சிலைக்கு முன் நின்று தனது வாயில் எதோ பைப் ஒன்றை வைத்துள்ள புகைப்படம் வெளியானது. இதை கண்ட விஜய் ரசிகர் அது E சிகிரெட் என்றும் அந்த சிகிரெட் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டனர்.
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக, அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதாவது அது e -சிகிரெட்டாகவே இருந்தாலும் அவர் அதனை தாய்லாந்தில் தானே பயன்படுத்தி இருக்கிறார் என்றும், இந்தியாவில் இல்லையே என்று கூறி வருகின்றனர்.
அது ரைடர் பொதுவாக குடிக்கும் தண்ணீர் பைப் தான் என்றும், அது e சிகிரெட் எல்லாம் கிடையாது என்று பதிலடி கொடுத்தும் வருகின்றனர். அதனால் விவரம் தெரியாமல் பேச வேண்டாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.