ஸ்லிம் லுக்.. வேற லெவலில் AK.. அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி..!

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு எந்த வித பந்தாவும் இல்லாமல் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் டாப் நடிகரான அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில் AK 62 டைட்டில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தின் ராசியான முதல் எழுத்தான “v”ல் தான் இந்த முறையும் “விடாமுயற்சி” என டைட்டில் உள்ளது. இதனால் நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறலாம்.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். திரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருவதால் அவர் தான் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். எனவே அவரையே விடாமுயற்சிக்கும் ஹீரோயினாக போட்டால் படம் வேற லெவல் ஹிட் ஆகும் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். மேலும் படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.

இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் இந்த வாரம் புனேயில் துவங்க உள்ளது. அதில் வில்லனும் அஜித்தும் மோதும் காட்சி படமாக்க அங்கு பிரம்மாண்டமாக செட் போடப்பட்டுள்ளதாம். இப்படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக ரொமான்ஸ் காட்சிகளும் அதிகம் இடம் பெருமாம். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடாமுயற்சி படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தகவல் துவண்டு போயிருந்த அஜித் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், உடல் எடை கூடியிருந்த நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமானவர் ஷாலினி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அவ்வப்போது தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஷாலினி வெளியிட்டுள்ள அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

4 minutes ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

1 hour ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

1 hour ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

2 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

4 hours ago

This website uses cookies.