குறும்பா என் உலகே நீதான் டா.. மகனுடன் ஷாப்பிங் சென்ற அஜித்.. ஷாலினி பகிர்ந்த கேஷுவல் க்ளிக்..!
Author: Vignesh13 March 2024, 3:58 pm
தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரவது நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் துணிவு. தற்போது, இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், இணையத்தில் இவர் நடித்து வரும் படப்பிடிப்பு தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அஜித், ஷாலினி தம்பதியின் மகனின் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளை இருவரும் நேரில் கண்டு ரசித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சென்னை திரும்பி அஜித் கடந்த ஏழாம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்கு தான் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக அஜித் தரப்பில் அப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும், முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை மூளையில் கட்டி என அவரது உடல்நிலை குறித்து அடுத்தடுத்து தகவல்கள் பரவியது.

இதனிடையே, அஜித் தரப்பில் இருந்து அளித்துள்ள விளக்கத்தில், நரம்பில் வீக்கம் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. இது ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்திருந்த நிலையில், அறுவை சிகிச்சை முடித்துவிடு திரும்பிய அஜித் பின்னர் மருத்துவர்களின் அலோசனையின் பெயரில் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று நெருங்கிய வட்டாரங்கள் மூலம் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மகன் ஆத்விக்கு உடன் அஜித் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்றை ஷாலினி பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.