என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!
Author: Prasad1 April 2025, 7:45 pm
குட் பேட் அக்லி
வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவரவுள்ளது. அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.

“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் தனுஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருவதால் அடுத்த ஆண்டே அவர் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தானே முன் வந்து கேட்ட அஜித்!
இந்த நிலையில் அஜித்குமார் சிறுத்தை சிவாவிடம் தானே முன்வந்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்குங்கள் என்று கூறியதாக பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு தகவலை கூறியுள்ளார்.
“கங்குவா” திரைப்படம் மிகப் பெரிய தோல்வியாக அமைந்துவிட்ட நிலையில் அஜித்குமார் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை சிறுத்தை சிவாவிற்கு வழங்கினாராம். எனினும் சிறுத்தை சிவா, “நான் வேறு நடிகரை வைத்து ஒரு ஹிட் படத்தை இயக்கிவிட்டு வருகிறேன்” என்று அஜித்திடம் கூறினாராம்.
சிறுத்தை சிவா தற்போது கார்த்தியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் அஜித்தை வைத்து இயக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.