உயிர் நண்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அஜித் – வைரல் வீடியோ!

Author: Rajesh
13 February 2024, 3:19 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

ajith-updatenews360

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் குறித்து எந்த ஒரு செய்தி என்றாலும் அது சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி விடும். அந்தவகையில் தற்போது அஜித்தின் நெருங்கிய நண்பரும் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மேயர் என பல முக்கிய பதவிகளில் இருந்துள்ள சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் உயிரிழந்தார்.

இமாச்சல் பிரதேசத்தில் நடந்த இந்த விபத்தில் துரைசாமி காருடன் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்துவிட்டார். 8 நாட்களுக்கு பின்னர் கிடைத்த அவரின் உடல் நேற்று வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் அஜித் மறைந்த தன் நண்பர் துரைசாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 287

    0

    0