தம்பி அந்த கேமராவ எடு.. விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் எடுத்த அசத்தல் கிளிக்..!
Author: Vignesh15 December 2023, 6:00 pm
அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார். இதனால் படத்தின் ஷட்டிங் ஆரம்பிப்பார்களா? இல்லையா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றது.
பின்னர் அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் ஆரம்பம் ஆனது. இதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். அஜர்பைஜானில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்,படக்குழுவினர் திடீரென சென்னை திரும்பினர். இதனால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு எப்போது துவங்கும் என ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் அஜித் செம மாசான ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிக்பாஸ் பிரபலம் ஆரவ் அஜித்துடன் எடுத்துக்கொண்ட இந்த போட்டோவில் AK செம ஸ்லிம்மாக, ஸ்மார்ட்டாக இருக்கிறார். இது விடாமுயற்சிக்காக அவர் மெயின்டைன் செய்து வரும் கெட்டப் என்று கூறப்படுகிறது. எனவே விடாமுயற்சி படத்தில் அஜித் யங் லுக் தோற்றத்தில் செம மாஸாக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.
AK's Love For Photography#AjithKumarPhotography#MagizhThirumeni @trishtrashers @akarjunofficial@anirudhofficial @ReginaCassandra @Aravoffl #OmPrakash
— Suresh Chandra (@SureshChandraa) December 15, 2023
@ProRekha @DoneChannel1 @vidaamuyarchii
@gopiprasannaa @gkmtamilkumaran
@LycaProductions #Subaskaran pic.twitter.com/ifiy6dbZ4s
இந்நிலையில், படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன், இயக்குனர் மகிழ்த்திருமேனி, நடிகை ரெஜினா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் போன்றவர்களை அஜித் போட்டோ எடுத்துள்ளார். அஜித் எடுத்த போட்டோவை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.