சினிமாவில் இருந்து விலகும் அஜித் : வெளிநாட்டில் செட்டில் ஆக முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan11 November 2024, 1:32 pm
நடிகர் அஜித்குமார் தனது கடின உழைப்பால் சினிமாவில் உயர்ந்த இடத்திற்கு முன்னேறினார். இவருக்கு ரசிகர்கள் பலம் அதிகம் உண்டு.
தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் அஜித், பைக் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பைக் ரேஸிங், கார் ரேஸிங்கில் பங்கேற்பார்.
இதையும் படியுங்க: விஜய்யுடன் நடிக்க மறுத்த சினேகா… எல்லாத்துக்கும் காரணம் வெங்கட் பிரபு தானாம்!
வெளிநாட்டில் செட்டில் ஆக முடிவு
தற்போது அஜித் வெளிநாட்டில் செட்டில் ஆக உள்ளதாக தகவல் காட்டுத்தீப் போல பரவி வருகிறது. இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளதாகவது, சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் அஜித், துபாயில் ஏற்கனவே 2 வீடுகள் வாங்கியுள்ளார்.
தற்போது லண்டனில் இடம் வாங்கியுள்ளார். லைகா உதவியால் அங்கு இடம் வாங்கியதாகவும் அங்கேயே செட்டில் ஆக உள்ளதாக அந்தணன் கூறியுள்ளார்.
சினிமாவில் இருந்து விலகல்?
விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்த படங்களில் கமிட் ஆகாமல் உள்ளார். தேசம் விட்டு தேசம் ரைடு போகும் அஜித் சினிமாவுக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.