நானும் ரவுடி தான் படத்தை பார்த்து அஜித் சொன்ன விஷயம்…பார்த்திபன் வெளியிட்ட பதிவு..!
Author: Selvan1 December 2024, 5:26 pm
விக்னேஷ் சிவன்-அஜித் சந்திப்பு
விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமின்றி பல படத்திற்கு பாடல்களும் எழுதியுள்ளார்.அந்த வகையில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு ஒரு பாட்டு எழுதினார்.

அப்போது அஜித்தை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.அந்த நேரத்தில் அஜித் விக்னேஷ் சிவனிடம் வந்து நானும் ரவுடி தான் படத்தை பல முறை பார்த்துளேன் எனவும்,அதிலும் குறிப்பாக பார்த்திபன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சுது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: ரசிகர்களை பரவசப்படுத்திய அனிருத் ..சிங்கப்பூரில் நடந்த மாயாஜாலம்..!
நானும் ரவுடி தான் படம் மாதிரி இன்னொரு கதை ரெடி பண்ணுங்க,நம்ம சேர்ந்து பண்ணலாம் என அஜித் விக்னேஷ் சிவனிடம் சொல்லியுள்ளார்.இந்த தகவலை விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பார்.
பார்த்திபன் வெளியிட்ட பதிவு
இந்த நிகழ்வை தற்போது பார்த்திபன் தன்னுடைய X தளத்தில் பதிவிட்டு “அஜித்தை உலகத்துக்கே பிடிக்கும்… ஆனால் அவருக்கு நம்ம கேரக்டர் பிடிக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு” என பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன்,அஜித்துக்கு மலையாளத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் மாதிரி ஒரு கதையை வைத்துள்ளதாக சமீபத்தில் கூறியிருப்பார்.
கூடிய விரைவில் அஜித் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு இருப்பதாக,ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.