“குட் பேட் அக்லி “அஜித்தின் புது கெட்டப்..நடிகர் பிரசன்னா போட்ட பதிவு…ரசிகர்களிடையே வைரல்…!

Author: Selvan
15 December 2024, 11:44 am

அஜித்தின் இளமை தோற்றம்

சமீபத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இருந்து அஜித்தின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அதில் அஜித் தன்னுடைய இளமை கால லுக்கில் செம அழகாக இருக்கிறார்.

Ajith Vintage Look Viral

இதற்காக தன்னுடைய முழு தோற்றத்தையும் அஜித் மாற்றி இருக்கிறார்.இதற்கு இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரன் தான் கரணம் என ரசிகர்கள் அவரை ஒரு பக்கம் கொண்டாடி வருகின்றனர்.

குட் பேட் அக்லி திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: “குட் பேட் அக்லி”படத்தில் 3 அஜித்…ஆதிக்ரவிச்சந்திரன் கனவு…ரசிகர்களுக்கு செம விருந்து..!

படத்தின் தலைப்புக்கு ஏற்ப 3 கெட்டப்பில் அஜித்தை களம் இறங்குகிறார் இயக்குனர்.இப்படம் ஒரு கேங்ஸ்டர் நிறைந்த ஒரு ஆக்ஷன் படமாக அமையும் என தோன்றுகிறது,இது அஜித்துக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அஜித்தின் புதிய கெட்டப்பை நடிகர் பிரசன்னா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அஜித்தை “இனி அழகே அஜித்தை”-னு வச்சுக்கலாமா என குறிப்பிட்டுள்ளார்.

Ajith-Prasanna Instagram Post

இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Simbu sings breakup song மீண்டும் வைரலாகும் STR-வாய்ஸ்…டிராகன் படக்குழு கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்….!