வாழ்க்கையை செதுக்கி செதுக்கி உருவாக்கிய தல அஜித்தின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Author: Shree27 August 2023, 1:45 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மற்ற நடிகர்களை போன்று படங்களில் நடித்துவிட்டு அதை வித விதமாய் ப்ரோமோஷன் செய்வதெல்லாம் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. பொய்யாக வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவே மாட்டார்.
திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ, நேர்காணலுக்கோ, பொது விழாக்களிலோ அஜித்தை பார்க்கவே முடியாது. ஒரு படம் முடித்துவிட்டால் ட்ரிப் சென்றுவிடுவார். இல்லையெனில் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் , கார் ரேஸ் ட்ரோன் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செல்வது தான் அஜித்தின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக பார்க்கிறோம். படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு எந்த ஒரு பப்ளிசிட்டியையும் விரும்பாத சாதாரண மனிதராகவே நடந்துக்கொள்வார்.
மொத்தத்தில் மிகச்சிறந்த நடிகராகவும், மிகச்சிறந்த மனிதராகவும் பார்க்கப்படும் அஜித் எந்த ஒரு சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் படத்திற்கு படம் தனது திறமையை காட்டி வாழ்க்கையை செதுக்கி செதுக்கி உருவாக்கினார். நேர்மையாக உழைத்து சம்பாதித்து வைத்திருக்கும் அஜித்தின் முழு சொத்து மதிப்பு ரூ. 350 கோடி முதல் ரூ. 400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதில் சொகுசு பங்களா, ரூ. 25 கோடி ஜெட் விமானம், ரூ. 34 கோடியில் லம்போர்கினி கார், BMW 7-Series 740 Li, Aprilia Caponard பைக், BMW S1000 RR பைக் மற்றும் BMW K1300 S என கோடி கணக்கில் அசையும் சொத்துக்களையும் அசையா சொத்துக்களையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.