காதலை கூறிய அஜித்.. ஷாக்கான ஷாலினி.. இப்படியொரு ப்ரொபோஸ் யாருமே பண்ணிருக்க மாட்டீங்க..!
Author: Vignesh16 February 2024, 10:52 am
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து அஜித் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார்.
திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகியும், அஜித் ஷாலினிக்கு இப்போது, வரை காதல் குறையாமல் அப்படியே இருந்து வருகிறார்கள். அனோஷ்கா மற்றும் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், அஜித் குறித்தும் அவர் ஷாலினியிடம் காதலை எப்படி வெளிப்படுத்தினார் என்பது குறித்து இயக்குனர் சரண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் சரண் ஷாலினி மற்றும் அஜித் மூவரும் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தனராம். ஷாலினி ஒரு பக்கமும் அஜித் மறுப்பக்கமும் இருக்க இவர்கள் இருவருக்கும் இடையே இயக்குனர் சரண் அமர்ந்தாராம். அப்போது, அஜித் படத்தை கொஞ்சம் சீக்கிரமா முடிங்க சரண் என்று இயக்குனர் சாரணியிடம் கூறியுள்ளார்.
இது ஷாலினியின் காதுகளில் கேட்கும் படி மீண்டும் படப்பிடிப்பை சீக்கிரமா முடிங்க சரண் இல்லனா இந்த பொண்ணு எங்க நான் காதலித்து விடுவேன்னு பயமா இருக்கு, அதனால சீக்கிரமா படத்தை முடிச்சுடுங்க என அஜித் கூறினாராம். இது ஷாலினிக்கு கேட்டு அவர் முகம் ஷாக் ஆனதாம். இப்படித்தான் அஜித் முதன் முதலில் ஷாலினிடம் தன் காதலை வெளிப்படுத்தினாராம்.