அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?
Author: Udayachandran RadhaKrishnan29 April 2025, 5:51 pm
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக பார்க்கப்பட்டது.
ஆனால் X தளத்தில் அஜித்துக்கு ஆதரவாக ஹேஷ்டேக் உருவாக்கப்ப்டட டிரெண்ட் ஆன நிலையில், மறுபக்கம் அஜித்துக்கு எதிராக விமர்சனங்கள எழுத் தொடங்கியது.
அஜித் சினிமாவில் ஆரம்பகாலக்கட்டத்தில் நடித்த போது, உடன் நடித்த நடிகை ஹீராவை காதலித்ததாகவும், இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் அப்போதைய காலத்தில் பரவலாக பேசப்பட்டது.
ஆனால் அந்த விஷயத்தை தற்போது அஜித் விருது வாங்கிய நேரம் X தளத்தில் அவருக்கு எதிராகவும், ஹீராவுக்கு ஆதரவாகவும் பரப்பப்பட்டது ஏன் என்ற கேள்வி தான் எழுந்தது.
பின்னணியில், வடநாட்டில் இருந்து இந்த செய்திகள் பரவியது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஹீராவை, அஜித காதலித்து ஏமாற்றியதாகவும், அஜித் முதுகு தண்டு சிகிச்சை செய்த போது, உடனிருந்த ஹீரா பார்த்துக் கொண்டதாகவும், ஆனால் சிகிச்சை எடுத்து குணமாகிய பின், ஹீரா மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்து அஜித் ஏமாற்றியதாகவும் இன்று காட்டுத்தீ போல ட்விட்கள் பறந்தன.
ஆனால் இதெல்லாம் முழுக்க முழுக்க அவதூறு தான். இப்படி பரப்பப்படும் செய்திகள் விஜய் ரசிகர்கள் பகிர்வது போலவும், அதற்கு எதிராக அஜித் ரசிகர்கள், விஜய்க்கு ஓட்டு போட மாட்டோம் என பதிலடி கொடுப்பது போலவும் அமைந்தது.
ஆனால் விஜய், அஜித் ரசிகர்களிடம் மோதலை உருவாக்கி அதில் குளிர் காய பின்னணியில் ஏதோ அரசியல் சதி நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித்துக்கு விருது என்ற அறிவிப்பு வந்த உடன், விஜய்யே பாராட்டியதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இது போன்ற கீழ்த்தரமான வேலைகளை விஜய் ரசிகர்கள் செய்வது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி, அரசியல் குளிர் காய நினைத்தது யார் என்ற கேள்வியும் எழுகிறது.

25 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு செய்தியை தற்போது அவதூறு பரப்பி, அஜித் – விஜய் ரசிகர்களிடையே மோதலை உருவாக்க நினைத்தது யார்? விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் நெட்டிசன்கள் செய்தனரா? இல்லை விஜய் அரசியலை சிதைக்க செய்த சதியா? என தெரியவில்லை.
