அதிமுகவில் அஜித்துக்கு காத்திருந்த பொறுப்பு : ஜெயலலிதா போட்ட மாஸ் பிளான்!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2025, 11:52 am
தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் உச்ச நடிகராக உயர்ந்தவர் நடிகர் அஜித். முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.
திரைமறைவில் உதவிகளை செய்ய விரும்பும் அஜித், பல ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் கட்சியில இணைய இவருக்கு அழைப்பு வந்தது.
இதையும் படியுங்க : பிரபுதேவா கான்செர்ட்டில் பாகுபாடு.. வேதனையுடன் விலகிய பிரபல நடிகை!
ஜெயலலிதா இருக்கும் போதே அதிமுகவுக்கு வருமாறு அஜித்து அழைப்பு வந்திருந்தது. அஜித் கட்சிக்குள் வந்தால் எந்த மாதிரி இருக்கும் என தனது ஆலோசகரிடம் பேசியுள்ளார் ஜெயலலிதா. ஆலோசகரும் அஜித் ஜென்டிலான மனிதன் என்கிற பார்வை மக்களோடு உள்ளது என கூறியுள்ளார்.
இதையடுத்து கட்சியில் அவரை இணைக்க ஜெயலலிதா நினைத்துள்ளார். ஆனால் அஜித்தோ பொறுப்பே வேண்டாம் என மறுத்துவிட்டார்.
ஒரு வேளை அஜித் அதிமுகவில் ஜெயலலிதா ஆதரவோடு வந்திருந்தால் நிச்சயம் முதலமைச்சர் ஆகியிருப்பார். மிகப்பெரிய பொறுப்பை தவற விட்டுவிட்டாரே என ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர், அஜித் ஜென்டில்மேன் என்பதால் அவர் எடுத்த முடிவு சரியே என கூறி வருகின்றனர்.