அஜித்துக்கு எதிராக கட்டம் கட்டிய சுகாசினி.. இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் முடிவு கட்டிய மணிரத்தினம்..!

Author: Vignesh
29 July 2023, 4:45 pm

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படத்தில் ஒரு நடிகர் செட்டாவார் இவர் செட்டாக மாட்டார் என்று படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரியவந்துவிடும். அப்படி நடிகர் அஜித்குமார் 10 நாட்களில் படத்தில் நடித்து அதன் பின் தயாரிப்பாளர் கொடுத்த அழுத்தத்தால் படத்தில் இருந்து விலகிய சம்பவம் நடந்துள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்குவதை தாண்டி மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். முதலில் தன் படத்தினை தயாரித்து வந்த மணிரத்தினம் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்காக படத்தினை தயாரிக்க ஆரம்பித்தார்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் தயாரிக்கும் படங்களின் கதை கதாபாத்திரம் டப்பிங் உள்ளிட்ட பல விதங்களில் மணிரத்தினம் மனைவி சுகாசினியின் பங்கும் இருந்து வந்தது. அந்த சமயத்தில் வசந்த் இயக்கத்தில் சூர்யா விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நேருக்கு நேர். தமிழ் சினிமாவிற்கு நேருக்கு நேர் படத்தின் மூலம் நடிகர் சூர்யா அறிமுகமானார்.

Nerrukku Ner-updatenews360

நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் கமிட்டானவர் அஜித் தான். சில நாட்கள் நேருக்கு நேர் படத்தில் நடித்த அவர் கதையில் தன்னுடைய கதாபாத்திரம் வலுவாக இல்லாத காரணத்தினால் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.

Nerrukku Ner-updatenews360

அதுவும் கமிட்டாகி 10 நாட்களில் அஜித் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதற்கு காரணம் அஜித்திற்கும் இயக்குனர் வசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இது மணிரத்தினம் சுகாசினியின் காதிற்கு சென்றது.

உடனே மணிரத்தினம் சுகாசினி இயக்குனர் வசந்திடம் அஜித்தை படத்திலிருந்து தூக்கி விடலாம் என்று பிளான் போட்டு இருக்கிறார். தயாரிப்பாளர்கள் என்பதால் அதற்கு வசந்தும் ஓகே சொல்லி இருக்கிறார். அதன் பின் அஜித் ரோலுக்கு பிரசாந்த் பிரபுதேவாவை கேட்க தனிப்பட்ட காரணத்தினால் அவர்கள் இருவரும் நடிக்க மறுத்துவிட்டனர்.

mani ratnam suhasini -updatenews360

அதன் பின்னர் சூர்யாவிடம் கேட்க முதலில் சிவக்குமார் வேண்டாம் எனக் கூறி அதன்பின் மணிரத்தினம் கூறியதால் ஓகே சொல்லி நடிக்க வைத்திருக்கிறார். சூர்யா அறிமுக நடிகர் என்பதால் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

  • Amaran Conducted Grand Ceremony of Success Meet கொண்டாடப்படும் அமரன்.. பிரம்மாண்ட விழா நடத்தும் படக்குழு : சிறப்பு விருந்தினர் இவருதான்!
  • Views: - 434

    0

    0