பாக்ஸ் ஆபீசை அடிச்சு நொறுக்கிய மங்காத்தா… அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Author:
1 September 2024, 9:10 am

அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய டர்னிங் பாயிண்டாக அமைந்து மாபெரும் வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டது “மங்காத்தா”. இந்த திரைப்படம் வில்லத்தனம் ,பின்னணி இசை, சண்டை காட்சிகள் என ஒட்டு மொத்தமே படத்தில் அதிரடியாக இருந்தது.

Actor Ajith

இதனால் மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டது. அப்படி ஒரு நிலையில் வெளியான இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களை கொண்டாட்ட வைத்தது. குறிப்பாக அஜித்தின் மேனரிசம் இந்த திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி ரசிகர்களை தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டாட வைத்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஜித், திரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அஜித்துடன் சேர்ந்து ஆக்சன் கிங் அர்ஜுன், வைபவ் , பிரேம் ஜி அமரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலமே இதில் நடித்திருந்தார்கள் .

Mankatha

இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது. மங்காத்தா படத்தின் பின்னணி இசை இன்றைக்கும் தமிழ் சினிமாவின் மகுடத்தின் மாணிக்கமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் அஜித்தின் 50 ஆவது திரைப்படமாக வெளியாகியது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் நேற்று இணையதளங்கள் முழுக்க ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள். இந்த நேரத்தில் அஜித் இப்படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் குறித்த தற்போதைய தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்காக அஜித் ரூ.10 கோடி சம்பளமாக வாங்கினாராம்.

Mankatha Ajith

இந்த படத்தில் தான் அஜித் டபுள் டிஜிட்டில் சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா திரைப்படம் ரூ . 24 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ரூ. 68 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 420

    0

    0