அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இணைந்த காதல் ஜோடியுடன் செல்ஃபி எடுத்த அஜித்..! வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh8 October 2022, 12:15 pm
தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைத்து வருகின்றனர். இவர் கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். இதனிடையே, அஜித் பைக்கில் ஹிமாலயாவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களால், பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதனிடையே, துணிவு படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டு உள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பிக் பாஸ் காதல் ஜோடிகளான அமீர் மற்றும் பாவனி நடிப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், அதை அஜித் உறுதிசெய்துள்ளார்.
அஜித்துடன் சிபி, அமீர் மற்றும் பாவனி எடுத்த செல்ஃபி தற்போது வெளிவந்துள்ளது. இதன்முலம், இவர்கள் துணிவு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பிக்பாஸ் பிரபலம் சிபி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.