தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் 53 வயதாகியும் இன்னும் தொடர்ந்து அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களில் நடித்து இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகளிலும் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார். அஜித் நடிகை ஷாலினி உடன் இணைந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது அவரை காதலிக்க தொடங்கி பின்னர் 2000 ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .

இவர்களுக்கு ஆத்விக் மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி விட்டார். குடும்பம் குழந்தை என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அஜித் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சொல்லப்படும் தகவல் என்னவென்றால் அஜித் மற்றும் ஷாலினியின் திருமண பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்ததிருமண பத்திரிக்கையை அஜித்தின் ரதிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர்.