பிரபல தயாரிப்பாளர் வீட்டில் 2 மணி நேரம் காத்திருந்த அஜித் – ஷாலினி : வெளியான உண்மை!!
Author: Udayachandran RadhaKrishnan7 March 2023, 4:31 pm
தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர், அதே போல அவரை வைத்த இயக்கவும், படத்தை தயாரிக்கவும் பல பிரபலங்கள் காத்து வருகின்றனர்.
எந்த பிரச்சனைக்கு செல்லாத அஜித், தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர், திரைமறைவில் பலருக்கும் உதவி செய்து வருகின்றார்.
ஆரம்பத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகர் அஜித் தற்போது ரசிகர்களின் நலன் கருதி பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு தெரிவித்திருக்கும் கருத்து ஒன்று அவரது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
அதாவது தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மனைவி சிங்கப்பூரில் மரணமடைந்ததால் அவருடைய உடலை சென்னைக்கு கொண்டு வர ரொம்பவே தாமதமானதாம்.
அந்த நேரத்தில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் தயாரிப்பாளர் தாணு வீட்டு வாசலில் இரண்டறை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தாராம். இதனை உருக்கமாக கூறியிருக்கிறார் கலைப்புலி தாணு.
இதனைக் கேட்ட ரசிகர்கள், அஜித்தை கொண்டாடி வருகிறார்கள். நடிகர் அஜித் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார்.
அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை. இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். அதனை முடித்துவிட்டு மீண்டும் பைக்கில் உலகம் சுற்றும் பயணத்தை தொடங்க உள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.