தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் பல வருடங்களுக்கு முன் ஆங்கில சேனல் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது
அந்த பேட்டியில் டி20 போட்டிகள் குறித்துப் பேசி இருக்கிறார் அஜித். அவர் குறிப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் மாறிவிட்டது.மக்கள் அனைவரும் உயர்ந்த குறிக்கோளைக் கொண்டு தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் விளையாட்டு போட்டிகளை ஒரு நாள் முழுவதும் அமர்ந்து பார்த்து நேரத்தை வீணாக்க மக்களால் முடியாது.ஆதலால் இனிமேல் டி20 மட்டுமே இந்தியாவின் எதிர்காலமாக இருக்கப் போகிறது எனப் பேசியுள்ளார்.குறைவான நேரத்தில் ஒரு போட்டியை ஆர்வத்துடன் நம்மால் கண்டு களிக்க முடியும் என சொல்லியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அன்றே கணித்தார் எங்கள் தல என்று அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.