“குட் பேட் அக்லி”படத்தில் 3 அஜித்…ஆதிக்ரவிச்சந்திரன் கனவு…ரசிகர்களுக்கு செம விருந்து..!

Author: Selvan
15 December 2024, 10:43 am

ஆதிக்ரவிச்சந்திரனின் உணர்ச்சி மிக்க பதிவு!

நடிகர் அஜித் விடாமுயற்சி,குட் பேட் அக்லி என தன்னுடைய படங்களில் மும்மரமாக நடித்து வருகிறார்.ஏற்கனவே மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தின் பணிகள் முழுவதும் நிறைவடைந்து,படம் பொங்கல் அன்று சொன்னமாதிரி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Good Bad Ugly ajith Three Looks

தற்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி”படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் அஜித்தின் காட்சிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்க: கண் கலங்கிய “சமந்தா”ஆறுதல் சொன்ன விக்னேஷ் சிவன்…அடுத்தடுத்து இன்ஸ்டா பதிவு…எதற்குனு தெரியுமா..!

அஜித்தின் புதிய கெட்டப் வைரல்!

படத்தின் இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என்பதால்,எமோஷனல் ஆகி அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு,தன்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவில் அஜித் அமர்க்களம் பட கெட்டப்பில் இருக்கிறார்.

காதில் ஒரு கம்மல்,கழுத்தில் ஒரு செயின்,வின்டேஜ் லுக்கில் செம அழகா இருக்கிறார்.ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் இரண்டு கெட்டப் வெளியாகியிருக்கும் நிலையில்,தற்போது இந்த கெட்டப்பால் “GUD-க்கு ஒரு லுக்,BAD-க்கு ஒரு லுக்,UGLY-க்கு ஒரு லுக்” இருக்கும் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

  • Vidaamuyarchi Release date அஜித் வாக்கு என்னாச்சு..? மீண்டும் தள்ளிப்போகிறதா விடாமுயற்சி ரிலீஸ்?