விஜய் உடன் சேர்ந்து நடிக்கும் அஜித்? ஆனால், ஒரு கண்டிஷன்.. ட்ரெண்டாகும் AK-வின் பேட்டி..!
Author: Vignesh31 January 2024, 2:19 pm
தமிழ் சினிமாவில் அஜித்-விஜய் ரசிகர்கள் தான் முக்கியமாக பார்க்கப்படுபவர்கள். அவர்கள் அவர்களின் ஆசை நாயகனுக்காக செய்யும் விஷயங்களை பார்த்து தான் மற்ற பிரபலங்களின் ரசிகர்களும் செய் வருகிறார்கள். முன்னதாக எம்ஜிஆர், சிவாஜி ரஜினி, கமலுக்கு அடுத்து தொடர்ந்து வருவது அஜித் விஜய் ரசிகர்களின் சண்டைதான்.
எந்த பிரபலங்களின் ரசிகர்களும் போடாத சண்டை எல்லாம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களால் நடந்துவிட்டது. ஒரு காலகட்டத்தில் சமூக வலைதளம் பயன்படுத்தும் அனைவருமே இந்த ரசிகர்களின் நாயகர்கள் இவர்களுக்கு ஏதாவது கூறலாமே கண்டுகொள்ளலாமே என புலம்பியுள்ளனர்.
அந்த அளவிற்கு இவர்களின் சண்டை ஒரு காலத்தில் பயங்கர பிரச்சினையாகவே சமூக வலைதளங்களில் மாறி இருந்தது. ஆனால், இப்போது புயல் பாதிப்பில் இருக்கும் மக்களுக்கும் இவர்களின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து உதவி செய்தார்கள். ஆனாலும், இவர்களுக்குள் சில சண்டைகளும் வரத்தான் செய்கிறது.
இவர்கள், தனித்தனியாக படங்களில் நடித்தாலே படம் செம மாஸாக இருக்கும் ஒன்றாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற கனவு ரசிகர்களிடம் உள்ளது. ஆனால், அது நடப்பதற்கு தான் எந்த வழியும் தெரியவில்லை. ரசிகர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவது போல் அஜித் விஜய்க்கும் அந்த ஆசை உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு அர்ஜுன் ரோலில் என்னை கேட்டிருந்தால் நான் நடித்து இருப்பேன் என விஜய் வெங்கட் பிரபுவிடம் கேட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறி இருப்பார். இந்த நேரத்தில், தான் விஜய்யுடன் நடிப்பது குறித்து அஜித் பேசிய பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், அஜித் கூறியதாவது விஜயுடன் இணைந்து நான் நடிப்பதற்கு முதலில் என்னுடைய ரசிகர்கள் ஆசைப்பட வேண்டும். இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் வகையில், கதை அமைய வேண்டும். அந்த கதையில் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று டிமான்ட் செய்தால் நான் கண்டிப்பாக விஜயுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.