“முகத்திற்கு நேராக பேச முடியாத முதுகெலும்பு இல்லாதவர்கள்”… பிரபல நடிகரை கடுமையாக விமர்சித்த தமன்னா..!
Author: Vignesh8 March 2023, 11:32 am
தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.
இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
இதனிடையே, கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவை விட்டு தமன்ன ஒதுங்கியதற்கான காரணம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, வாரிசு நடிகருடன் இவருக்கு இருந்த காதல் எப்படி முறிந்தது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது தமன்னா நடிகர் கார்த்தியுடன் இணைந்து பையா திரைப்படத்தில் நடித்திருந்த போது அவர்களுக்குள் நிஜமாகவே கெமிஸ்ட்ரி பற்றி கொண்டதாகவும், இதன் விளைவாக கார்த்தி நடிக்க இருந்த அடுத்த படத்திலும் தமன்னாவை ஹீரோயினாக போடும் படி பிரபல தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்ததால், கார்த்தியிடம் மறுக்க முடியாத தயாரிப்பாளர் சரி என்று சொல்லிவிட்டு அதை அப்படியே தந்தை சிவக்குமாரிடமும் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
இப்படியாக, தமன்னா கார்த்தி இருவருடைய காதல் விவகாரம் கார்த்தியின் குடும்பத்திற்கு தெரிய வந்ததால், எப்போதும் குடும்பம் கலாச்சாரம் என, பேசி வரும் சிவக்குமார் மூத்த மகன் சூர்யாவின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது ஊர் உலகம் அறிந்த ஒன்று பலவித சர்ச்சைகளுக்கு பின்னர் தான் பிறகு எப்படியோ அவர் சூர்யா, ஜோதிகாவின் திருமணத்தை நடத்திவிட்டார்.
ஆனால் கார்த்தியின் திருமணம் தன் இஷ்டப்படி தான் நடக்க வேண்டும் என்பதில் மட்டும் சிவக்குமார் உறுதியாக இருந்தார். அப்படிப்பட்டவருக்கு இந்த ஒரு செய்தி இடியாக வந்து இறங்கி இருக்கிறது. உடனே அவர் நாசுக்காக ஒரு பிளான் போட்டு தமன்னாவின் மேனேஜரை அழைத்து கார்த்திக்கு விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதுவரை தமன்னாவை தமிழ் படங்களில் கமிட் செய்யாமல் வேறு மொழி படங்களில் கமிட் செய்ய சொல்லியும் கேட்டுக்கொண்டாராம்.
அதற்கு சம்மதித்த அந்த மேனேஜரும் தமன்னாவை தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க கமிட் செய்து சிலகாலம் தமன்னாவை தமிழ்நாட்டு பக்கம் வரவிடாமல் செய்திருக்கிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் கார்த்தி தன் அப்பாவிற்காக சினிமாவிற்கு சம்பந்தமில்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளுடன் தற்போது வாழ்ந்து வருகிறார்.
இந்த உண்மை பல வருடம் கழித்து தான் தமன்னாவிற்கு தெரிய வந்த நிலையில், உடனே அவர் தன் மேனேஜரை வேலையை விட்டு தூக்கியும், இந்த விஷயத்தை நேரடியாக தன்னிடம் கூறியிருந்தால் நானே கார்த்தியை விட்டு விலகி இருப்பேன் என்று மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் முகத்திற்கு நேராக பேச முடியாத முதுகெலும்பு இல்லாதவர்கள் என அதில் சம்பந்தப்பட்டிருந்தவரை அசிங்கப்படுத்தியும் உள்ளார். இந்த காதல் தோல்விக்கு பிறகு தமன்னா கிரிக்கெட் வீரர் விராட் கோலி உடன் நெருக்கமாக பழகியும், அதுவும், கை கூடாத நிலையில் தற்போது ஒரு ஹிந்தி நடிகரை அவர் டேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.