அஜித்தின் அடுத்த படம் அந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா.. ஆங்கில பட CD உடன் இயக்குனருக்கே கதை சொல்லும் AK!

Author: Vignesh
8 March 2023, 2:30 pm

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பெரிய குழப்பத்திற்கு பிறகு தற்போது ஒருவழியாக மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக முடிவாகி உள்ளது. இதற்காக தற்போது அனைத்து வேலைகளும் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தின் கதைக்கான சம்மதத்தை அஜித்திடம் வாங்குவதற்கு மகிழ் திருமேனி மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

Ajith Vishnuvardhan - Updatenews360

ஏனென்றால் இந்த ஏகே62 படத்திற்காக இரண்டு கதைகளை தயார் செய்து அஜித்திற்கு சொல்லி இருக்கிறார். அதில் ஒரு கதை அஜித்திற்கும், தயாரிப்பாளருக்கும் பிடித்துப் போன பிறகுதான் இந்த ப்ராஜெக்ட்டை இருவரும் ஒப்புக்கொண்டு உள்ளார்கள். அதன் பின்னரே தற்போது ஏகே 62 படம் தயாராகி வருகிறது.

ஆனால் அஜித்திற்கு தற்போது ஒரு புதிய பழக்கம் வந்து இருக்கிறது. அதாவது தனக்கு பிடித்த படத்தின் சிடியை, அஜித்திடம் வரும் இயக்குனர்களிடம் கொடுத்து அதை பார்க்கச் சொல்வாராம். பின்னரே அதே மாதிரி ஒரு கதையை நம்ம பண்ணலாமா என்று கேட்பாராம். இதனால்,இயக்குனர்களும் இவரிடம் மறுப்பு தெரிவிக்க முடியாமல் சரி என்று சொல்லிவிடுவார்களாம்.

Ajith - Updatenews360

இதே போல தான் எச் வினோத்திடம் அஜித் தெரிவித்ததாகவும், அவரும் அந்த சிடியை பார்த்து தான் துணிவு படத்தை கொஞ்சம் மாடுலேஷன் செய்து எடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் அஜித் சொன்ன மாதிரியே அந்த சிடி இவருக்கு ஒர்க்கவுட் தான் ஆகி இருக்கிறது. அதனாலயே இப்பொழுது அஜித் முழுவதுமாக அந்த சிடியை நம்பியே இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Ajith - Updatenews360

அதனால் ஏகே 62 படத்தை இயக்க உள்ள மகிழ் திருமேனியிடம் அதே மாதிரி இரண்டு படங்களை அஜித் காட்டியிருக்கிறார். ஆனால் இயக்குனர் அஜித்திடம் ஓபனாகவே சொல்லிவிட்டாராம். அதாவது இந்த சிடி படங்களை விட தன்னிடம் நல்ல கதைகள் இருக்கு என்று, அதற்குப் பின்னரே அஜித்திடம் கதை சொல்லி ஒருவழியாக சம்மதம் வாங்கி இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

ak 62 - updatenews360

தற்போது நடிகர் அஜித் இப்படி செய்வது கோலிவுட் வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அவர் பொதுவாகவே எந்த படங்களில் நடிக்க இருந்தாலும் சரியாக முழு கதை கூட கேட்காமல் நடித்துக் கொடுக்க கூடியவர். ஆனால் தற்போது ஏகே 62 படத்தில் ஒவ்வொரு விஷயங்களிலும் தலையிட்டு ஒப்பினியன் சொல்லி வருவதால், ஆக மொத்தத்துல இந்த வருடம் இவரது படம் ரிலீஸ் ஆவது சந்தேகம் தான் என பேசப்பட்டு வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 767

    4

    2