விஜய் ரோல் எனக்கு வேணும் என கேட்ட அஜித்.. நிராகரித்த இயக்குனர்.. கோபத்துடன் வெளியேறிய அஜித்..!
Author: Rajesh2 July 2023, 2:00 pm
எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் தொடர்ந்து விஜய் – அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே. இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் நட்பாக இருந்து ஒரே படத்தில் நடித்தும் உள்ளனர்.
அப்படி அஜித், விஜய் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. ஜானகி சவுந்தர் இயக்கத்தில் விஜய், இந்திரஜா, அஜித் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
இவர்கள் இருவரும் அவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் ஆகாத சமயம் என்பதால் நண்பர்களாக கிடைத்த ரோலில் நடித்து வந்தனர். இதற்கு பின்னர், நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜய், சூர்யா நடித்திருந்தனர். ஆனால், இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்திற்கு தேர்வானவர் அஜித் தான்.
ஆனால், அவர் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் தனக்கு வேண்டும் என கேட்டதால், இயக்குனர் நிராகரித்ததாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் தான் சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம்.